சென்னைக்கு கூடுதலாக 100 மில்லியன் லிட்டர் குடிநீர்

சென்னைக்கு கூடுதலாக 100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்வது குறித்து குடிநீர் வாரியம் ஆலோசித்து வருகிறது.

தற்போது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தினமும் 700 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. (ஒரு மில்லியன் என்பது 10 லட்சமாகும்). வடகிழக்குப் பருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணா குடிநீரும் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறது.

எனவே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தினசரி 100 மில்லியன் லிட்டர் குடிநீரை கூடுதலாக வழங்க சென்னை குடிநீர் வாரியம் ஆலோசித்து வருகிறது.

கோவை மாநகரில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதே திட்டத்தை சென்னையில் அமல்படுத்த முடியுமா என்பது குறித்தும் சென்னை குடிநீர் வாரியம் பரிசீலனை செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *