மெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. நுழைவு வாயிலில் ஒரு ஊழியர் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் பயணிகளின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்து, அவர்களுக்கு சானிடைசர் வழங்குகிறார்.
மேலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். `கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பயணிகள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.