முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்கலாம்

முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

“தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம்.

தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.11 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *