தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களில் வீடு, மனை, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்கள் கடந்த 2009 ஜூலை 6-ம் தேதிக்குப் பிறகு டிஜிட்டல் அடிப்படையில் பாதுகாக்கப்படுகின்றன.
அந்த ஆவணங்களின் நகலை இணையத்தின் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் 2009-க்கு முந்தைய ஆவணங்களை பெற முடியாத நிலை இருந்தது.
இதைத் தொடர்ந்து பழைய ஆவணங்களை ஸ்கேன் செய்ய ரூ.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக பெரம்பூரில் மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பழைய ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணைய வழியில் நகல் வழங்கப்படுகிறது. ஓரிரு வாரங்களில் மேலும் 10 மாவட்டங்களில் இந்த வசதி அறிமுகமாகிறது. அடுத்த 3 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் புதிய வசதி அமலுக்கு வரும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.