போலி பிஎஸ்என்எல் இணையதளம்.. உஷார்… என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. www.bsnlbharatfiberdealer.in என்ற பெயரில் செயல்படும் அந்த இணையதளம் வாயிலாக பிஎஸ்என்எல் வழங்கும் சேவைகளுக்கு பணம் வசூல் செய்யப்படுகிறது.
இந்த போலி இணையதளத்தில் யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். யாராவது பணம் செலுத்தியிருந்தால் bsnlprchn@gmail.com என்ற முகவரியில் தகவல் தெரிவிக்கலாம். பிஎஸ்என்எல் சேவைகளை www.chennai.bsnl.co.in, www.bsnl.co.in ஆகிய இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும் என்று பிஎஸ்என்எல் சென்னை அலுவலக பொதுமேலாளர் வி.கே.சஞ்சீவி தெரிவித்துள்ளார்.