தமிழக அரசு சார்பில் எம்சாண்ட் வரைவு விதிகள் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி அங்கீகாரமில்லாத குவாரிகளில் எம்சாண்ட் தயாரிப்பது தெரியவந்தால் ரூ.5 லட்சம் அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
போலி எம் சாண்ட் தயாரித்தாலும் இதே தண்டனை விதிக்கப்படும். குவாரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எம் சாண்ட் எடுத்துச் செல்லப்பட்டால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.