தீபாவளிக்கு ரூ.2000-மா?.. நம்பாதீங்க.. அமைச்சர் விளக்கம்..

தீபாவளிக்கு ரூ.2000-மா?.. நம்பாதீங்க.. என்று அமைச்சர் விளக்கம்.. அளித்துள்ளார்.பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்க பணம் வழங்கப்படுகிறது.

இதேபோல தீபாவளி பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 ரொக்க பணம் வழங்கப்பட உள்ளது என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதுகுறித்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.”தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவலை யாரும் நம்ப வேண்டாம். அந்த தகவல் வதந்தி” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *