24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் முறையான அங்கீகாரம் இன்றி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கல்லூரிகளின் விவரங்கள் பொதுமக்கள், மாணவர்கள் பார்வைக்காக வெளியிடப்படுகிறது.
இதில் டெல்லியில் 7, உத்தர பிரதேசத்தில் 8, மேற்குவங்கத்தில் 2 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.
கர்நாடகாவின் பெலகாவியில் செயல்படும் படாகான்வி சர்கார் வோர்ல்டு ஒபன் யூனிவர்சிட்டி எஜுகேசன் சொசைட்டி, கேரளாவில் கிருஷ்ணநத்தத்தில் செயல்படும் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், மகாராஷ்டிராவின் நாக்பூரில் ராஜா அரபிக் கல்லூரி ஆகியவை அங்கீகாரமின்றி செயல்படுகின்றன.
இதுகுறித்து முழுமையான விவரங்கள் www.ugc.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.