சிட்டுக்குருவிக்காக மதுரை குடும்பம் செய்த தியாகம்

சிட்டுக்குருவியை மையப்படுத்தி பல சினிமா பாடல்கள் வெளிவந்துள்ளன. தற்போது சிட்டு குருவிகளின் இனம் அழிந்து வருவதாக பறவையின ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். மதுரையில் சிட்டுக்குருவிக்காக ஒரு குடும்பம் டூவிலரை பயன்படுத்தாமல் உள்ளது.


மதுரையில் உலகனேரி பகுதியை சேர்ந்தவர் அருண் சுவாமிநாதன். வழக்கறிஞர். ஊரடங்கு காரணமாக அவர், தன்னுடைய டூவிலரை பயன்படுத்தவில்லை. அதனால் ஒரே இடத்தில் நின்ற டூவிலரில் சிட்டுக்குருவி கூடு கட்டி, மூட்டையிட்டது.

அதைக் கவனித்த குடும்பத்தினர் சிட்டுக்குருவிக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை.
அந்தக் கூட்டை கலைக்காமல் சிட்டுக்குருவிக்காக டூவிலரை அந்த இடத்திலிருந்து அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டனர். அதனால் கடந்த 3 மாதங்களாக அதே இடத்தில் டூவிலர் நிறுத்தப்பட்டு உள்ளது.


தற்போது சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்து உள்ளது. அதில் குஞ்சு ஒன்றும் பொரிந்து வெளியே வந்துள்ளது. சிட்டுக்குருவி தானாக பறந்து செல்லும் வரை இரு சக்கர வாகனத்தை அந்த இடத்தை விட்டு நகர போவதில்லை என்று அந்தக்குடும்பத்தினர் கூறுகின்றனர். டூவிலரை பயன்படுத்தாமலிருப்பது எங்களுக்கு சிரமம் என்றாலும் சிட்டுக்குருவிக்காக இந்தத் தியாகத்தை மனமகிழ்ச்சியோடு செய்கிறோம் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *