சென்னையைச் சேர்ந்த பேஷன் டிசைனரான இளம்பெண்ணின் வாழ்க்கையை தாம்பத்ய வீடியோ கேள்விகுறியாக்கியிருக்கிறது .
சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் பேஷன் டிசைனரான இளம்பெண் . இவர் வடபழனியில் பேஷன் டிசைனிங் படித்துக் கொண்டிருந்தபோது ஆவடியில் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்த மதன் என்பவருடன் ஃபேஸ் புக் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். இருவரும் மூன்றாண்டுகளுக்கு மேல் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் 2018-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி திருமணம் செய்திருக்கிறார்கள். இந்தத் தம்பதியினருக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் பேஷன் டிசைனரான இளம்பெண், சில தினங்களுக்கு முன் மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதற்கு முன் 4 பக்கங்களுக்கு தற்கொலைக்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்திருக்கிறார். மயங்கி கிடந்த சிந்துவை மீட்ட அவரின் அம்மா, குரோம்பேட்டை அரசு மருத்துவனையில் சேர்த்தார். சிகிச்சைக்குப்பிறகு சிந்து நலமாக இருக்கிறார். பேஷன் டிசைனரான இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மடிப்பாக்கம் போலீஸார் மதன், அவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
“எனக்கும் என் கணவர் மதனுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு மேரெஜ் நடந்துச்சு. நாங்க இருவரும் 3 வருஷமா காதலிச்சோம். நான் வடபழனியில பேஷன் டிசைனர் கோர்ஸ் படிச்சப்போ மதனோடு பேஸ்புக்ல பழக்கம் ஏற்பட்டுச்சு. எங்களுக்கு ஆண் குழந்த இருக்கு. கூடுவாஞ்சேரியில தனி வீட்ல குடியிருந்தோம்.
நான் வீட்டிலிருந்துக் கொண்டே போன் மூலமாக டெய்லரிங், மேக்கப் டிப்ஸ்களைக் கொடுத்து சம்பாதிச்சேன். என்னோட கணவர், ஐடி கம்பெனியில வேலைப்பார்க்கிறாரு. ஆகஸ்ட் மாசம் 11ம் தேதி வீட்டுக்கு மதன், அவரோட அண்ணன் , அப்பா பக்தவச்சலம் என சிலர் வந்தாங்க. என்னோட தகராறு செய்து குழந்தையை பிடுங்கிக் கொண்டு போயிட்டாங்க. அதனால மனம் உடைஞ்ச நான், அம்மாவோட மடிப்பாக்கத்தில தங்கினேன். அப்போ அம்மா பேக்கில இருந்த பிபி, சுகர் மாத்திரைகளில் ஒன்பதை முழுங்கிட்டேன். மாத்திரை சாப்பிட்டதும் அம்மாவுக்கு லெட்டர் எழுதிக் கொண்டே தூங்கிட்டேன். அதப்பார்த்த அம்மா, என்னை குரோம்பேட்டை ஆஸ்பிட்டல சேர்த்துட்டாங்க குழந்தையைப் பிடுங்கிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்” என்று பேஷன் டிசைனரான இளம்பெண் கண்ணீர்மல்க கூறினார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண், எழுதிய 4 பக்க கடிதத்தில் “என்னோட அந்தரங்க வீடியோஸ்களையும் போட்டோஸ்களையும் கணவர் மதன் எடுத்து வச்சு மிரட்டுகிறாரு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இளம்பெண் இன்னொரு அதிர்ச்சி தகவல் ஒன்றையும் கூறியிருக்கிறார். அதுஎன்னவென்றால், கணவரின் ப்ரெண்ட்ஸ்களுடன் தன்னை தனிமையில் இருக்கும்படி மிரட்டுவார். அதற்கு சம்மதிக்கவில்லை என்றால் முதலிரவு, என்னுடைய நிர்வாண வீடியோஸ்களை ஆபாச இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி சம்மதிக்க வைப்பார். அவரோட ப்ரெண்ட்ஸ்களுடன் சந்தோஷமாக இருக்கும்போது அதையும் வீடியோ எடுத்து ரசிப்பார் என தெரிவித்தார். இந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீஸார் அவரின் கணவர், கணவரின் அப்பா உள்பட 5 பேர் மீது வரதட்சணை கொடுமை, கடத்தல், அனுமதியின்றி வீடியோ எடுத்தல், கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் கணவர் குடும்பத்தினரை போலீஸார் இதுவரை விசாரிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் மலர்விழி குற்றம் சாட்டியிருக்கிறார்.
செல்போன்களிலிருக்கும் கேமரா கண்களில் தேவையில்லாத வீடியோக்கள், போட்டோஸ்களை எடுக்க அனுமதிக்காதீர்கள். அது இன்றைக்கு அல்ல… என்றைக்காவது உங்களுக்கு ஆபத்தாக முடியும். அதற்கு இந்த பேஷன் டிசைனரின் வாழ்க்கை ஒரு உதாரணம்.