செப்டம்பர் 15-க்கு பிறகு கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறுகிறது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர்த்து இதர செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
மேலும் அரியர் பாடத் தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது.
இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கண்டிப்பாக செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து வரும் 30-ம் தேதிக்குள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரிகளில் செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட உள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு செப்டம்பர் 15-க்குப் பிறகு நடைபெற உள்ளது.
இதற்கான தேர்வு கால அட்டவணை, தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
மாணவர்கள் நேரில் வந்து தேர்வுகளை எழுத வேண்டும். அவர்கள் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிஆர்க் பட்டப் படிப்பு சேர்க்கைக்கு https://www.tneaonline.org/ இணையதளம் மூலம் செப்டம்பர் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.