குறிப்பிட்ட கட்டுமான நிறுவனம் அம்பத்தூரில் ஒரு குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்துவதாக கூறி இணையத்தில் விளம்பரம் செய்தது. இதை நம்பி பலர் அந்த குடியிருப்பு திட்டத்தில் முதலீடு செய்தனர். அந்த குடியிருப்பு வேறு இடத்தில் அமைந்திருந்தது வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆணைய தலைவர் ஞானதேசிகன் தலைமையிலான அமர்வு விசாரித்து முக்கிய உத்தரவை பிறப்பித்தது.
“சம்பந்தப்பட்ட ரயில் எஸ்டேட் நிறுவனம், குடியிருப்பு இருப்பிடம் குறித்த முகவரியை சரியாக கொடுக்காதது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. தவறான விவரங்களை இணையத்தில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் நீக்க வேண்டும்” என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.