சென்னை கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் வீரா கட்டுமான நிறுவனம் ரூ.40 கோடி மதிப்பில் அடுக்குமாடி சொகுசு குடியிருப்புகளை கட்டி வருகிறது.
இந்த கட்டுமான திட்டத்துக்கு சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை.
இதுதொடர்பான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அப்போது கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியதற்காக வீரா கட்டுமான நிறுவனத்துக்கு பசுமை தீர்ப்பாயம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது.
இந்த தொகையை சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீடாக பயன்படுத்த தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.