மாணவியை அடித்த தலைமைஆசிரியைக்கு ரூ.50,000 அபராதம்

மாணவியை அடித்த தலைமைஆசிரியைக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், புளியரனன்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். கடந்த ஆண்டு 5-ம் வகுப்பு மாணவி, பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தார். அப்போது வளாக சாவியை அவர் தொலைத்துவிட்டார்.

அந்த மாணவியை தலைமை ஆசிரியை தேவி அடித்துள்ளார். இதில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன் விசாரித்து தீர்ப்பளித்தார். 

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை தலைமை ஆசிரியையிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *