அனுமதியின்றி மின்சார ரயில்களில் பயணம் செய்தால் அபராதம்

அனுமதியின்றி மின்சார ரயில்களில் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு, வேளச்சேரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த ரயில்களில் ரயில்வே ஊழியர்களும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்ய மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் சிறப்பு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். 

உரிய அனுமதி அட்டை இல்லாமம் பயணம் செய்வோருக்கு ரூ.200 முதல் ரூ.270 வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *