சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50,000 அபராதம்

சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை காரம்பாக்கம் சமயபுரம் நகரை சேர்ந்தவர் பூபாலன். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கும் இவரது சகோதரருக்கும் இடையே சொத்து பிரச்சினை உள்ளது.

இதுதொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் தீர்த்தகிரி, ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபாலனை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் விசாரித்தது. “சப்-இன்ஸ்பெக்டர் தீர்த்தகிரி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. இதற்காக அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை பூபாலனுக்கு வழக்க வேண்டும். தீர்த்தகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *