சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை நவ. 6-ம் தேதி தொடக்கம்

சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை நவ. 6-ம் தேதி தொடங்கப்படுகிறது.

தீபாவளியை ஒட்டி சென்னை தீவுத்திடல் வளாகத்தில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வவக்கம். இந்த ஆண்டு 30 முதல் 40 கடைகள் அமைக்கப்பட உள்ளன. சமூக இடைவெளியை பின்பற்றி மட்டுமே பட்டாசு விற்பனை நடைபெறும். 

நவம்பர் 6-ம் தேதி பட்டாசு விற்பனை தொடங்கும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும். நவம்பர் 15-ம் தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படாது என்று தீவுத்திடல் பொருட்காட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *