சுக்.. சுக்.. சுக்..சுக்.. முதல் ‘விவசாயி ரயில்’ புறப்பட்டது

கடந்த மத்திய பட்ஜெட்டில் அரசு, தனியார் பங்களிப்பு திட்டத்தில் ‘விவசாயி ரயில்’ சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி முதல் ‘விவசாயி ரயில்’, மகாராஷ்டிராவின் நாசிக் அருகேயுள்ள தேவ்லாலி ரயில் நிலையத்தில் இருந்து பிஹாரின் தானாபூருக்கு இன்று புறப்பட்டது.

காலை 11 மணிக்கு புறப்பட்ட ரயில் இன்று இரவு 7 மணிக்கு பிஹாரை சென்றடைகிறது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக ‘விவசாயி ரயில்’ சேவையை தொடங்கிவைத்தனர்.

தேவ்லாலில் இருந்து வெங்காயம், திராட்சை உள்ளிட்ட காய்கனிகள் பிஹாரின் தானாபூருக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மறுமார்க்கத்தில் பிஹாரில் இருந்து மீன், காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை ஏற்றிக் கொண்டு மகாராஷ்டிராவுக்கு ‘விவசாயி ரயில்’ வந்து சேரும்.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக 'விவசாயி ரயில்' சேவையை தொடங்கிவைத்தனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக ‘விவசாயி ரயில்’ சேவையை தொடங்கிவைத்தனர்.


தேவ்லாலி, தானாபூர் நகரங்களுக்கு இடையிலான தொலைவு ஆயிரத்து 519 கி.மீ. ஆகும். இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 31 மணி நேரமாகும். ‘விவசாயி ரயில்’ செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் அந்தந்த பகுதி விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ரயிலில் ஏற்ற வசதி செய்யப்பட்டுள்ளது.


ஒரு டன் வேளாண் விளைபொருட்களுக்கு ரூ.4,001 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘விவசாயி ரயில்’ சேவைக்காக சிறப்பு ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியும் குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரு பெட்டியில் 17 டன் வேளாண் விளைபொருட்களை ஏற்ற முடியும். ‘விவசாயி ரயிலில்’ தற்போது 11 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வரும் காலத்தில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *