ஒரே நாளில் அரை லட்சத்தை அசால்டாக தாண்டியது கொரோனா

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று 50 ஆயிரத்தை தொடும் வகையில் நெருங்கி வந்தது. எனினும் 50 ஆயிரத்தை தாண்டாமல் கட்டுக்குள் இருந்தது. முதல்முறையாக இன்று 52 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.


ஒரே நாளில் வைரஸ் தொற்று அரை லட்சத்தை தாண்டியிருப்பது இந்திய மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரத்து 792 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆறுதல் அளிக்கும் வகையில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 582 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 லட்சத்து 28 ஆயிரத்து 242 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பஞ்சாபின் சண்டிகரில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.
பஞ்சாபின் சண்டிகரில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.


கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 34 ஆயிரத்து 968 ஆக உயர்ந்திருக்கிறது.
ஆரம்பம் முதலே வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி விட்டது. தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் ஆந்திரா, கர்நாடகாவில் தலா ஒரு லட்சம் பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தலைநகர் டெல்லியில் வைரஸ் தொற்று பாதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்திருந்தாலும் அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. தற்போது 11 ஆயிரம் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். புதிய வைரஸ் தொற்று 500 ஆக குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் டெல்லி முன்னுதாரணமாக திகழ்கிறது.

தெற்கு மும்பையில் கொரோனா பரிசோதனைக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்.தெற்கு மும்பையில் கொரோனா பரிசோதனைக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
தெற்கு மும்பையில் கொரோனா பரிசோதனைக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்.


அனைத்து மாநில அரசுகளும் டெல்லி அணுகுமுறையை பின்பற்றுமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மக்கள் நெரிசல் மிகுந்த டெல்லியிலேயே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்றால் மற்ற நகரங்களிலும் வைரஸை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதார நிபுணர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *