மீன்வள படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26-ம் தேதி கடைசி நாள்

மீன்வள படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 26-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உறுப்பு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் கடந்த செப்டம்பர் 26 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

மீன்வள படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் 26-ம் தேதியாகும். முழுமையான விவரங்களை www.tnifu.ac.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 04365-256430, 94426 01908 ஆகிய எண்களிலும் விவரங்களை கேட்டறியலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *