பூவா…பூச்சியா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்திய வனத் துறையின் மூத்த ஐஎப்எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா. இவர் தற்போது ஒடிசா மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.


வனவிலங்குகள் தொடர்பான சுவாரசியமான புகைப்படங்கள், வீடியோக்களை இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவர் இன்று ட்விட்டரில் பதிவிட்ட ஒரு வீடியோ நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


பூ போன்ற தோற்றத்தில் இருக்கும் பூச்சி, ஓர் இலையில் அழகாக ஊர்ந்து செல்கிறது. இது பூவா, பூச்சியா என்று பெரும் குழப்பமே ஏற்படுகிறது. அந்த அளவுக்கு அச்சு அசல் பூ போலவே இந்த பூச்சி இருக்கிறது.


இதுகுறித்து ஐஎப்எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் அடிக்குறிப்பில், “இந்த பூச்சியின் பெயர் ஆர்சிட் மன்டிஸ். இது மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது. இயற்கை விந்தையானது” என்று குறிப்பிட்டுள்ளார்.


புலி, யானை, குரங்குகளின் வித்தியாசமான வீடியோக்களையும் சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்தனையும் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *