மாணவர்களுக்கு உலர் உணவு…

மாணவர்களுக்கு உலர் உணவு திட்டம் தொடரும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

உலர் உணவான அரிசி  உலர் உணவான பருப்பு
உலர் உணவான பருப்பு

இதைத் தொடர்ந்து மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவியரின் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த மாணவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அத்திட்டத்தை செயல்படுத்துவது கடினம் என்பதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் இணைந்துள்ள மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளிகளில் அரிசி, பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மதிய உணவு திட்டம் தொடர்பாக தமிழக அரசு இன்று செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

“தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவு திட்டத்தை தொடர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றுசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள், பெற்றோர் சம்பந்தப்பட்ட சத்துணவு திட்ட ஆசிரியரை செல்போனில் தொடர்பு கொண்டு எந்த நாளில் அரிசி, பருப்பை வாங்கிக் கொள்ளலாம் என்பதை கேட்டு அறிந்து கொள்ளலாம். இதன்மூலம் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும்.

பள்ளிக்கு செல்லும்போது அரிசி, பருப்பை வாங்க தனித்தனி பைகளை கொண்டு செல்வது நல்லது.

தற்போது அரசு பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன்காரணமாக அனைத்து பள்ளிகளும் கடந்த திங்கள்கிழமை முதல் வழக்கம்போல செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *