நடமாடும் ஆய்வகம் மூலம் பலகார கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வரும் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இனிப்பு வகைகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது. எனினும் சில கடைகளில் தரமற்ற இனிப்பு வகைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதைத் தொடர்ந்து சென்னை பலகார கடைகளில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இனிப்புகளின் தரத்தை கண்டுபிடிக்க நவீன நடமாடும் ஆய்வகத்துடன் நேரடியாக கடைகளுக்கே சென்று அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். தினமும் சுமார் 100 கடைகளில் ஆய்வு நடத்தப்படுகிறது.