நாகர்கோவில் கோட்டாறை சேர்ந்த 15 வயது சிறுமி, இரு வாரங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரித்து சிறுமியையும் அவருடன் இருந்த இளைஞரையும் பிடித்தனர்.
போலீஸில் சிறுமி அளித்த வாக்குமூலம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தாயாரின் அனுமதியுடன் பலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதன் காரணமாகவே விருப்பமான இளைஞருடன் தலைமறைவானதாக சிறுமி தெரிவித்தார்.
நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் (60), பால், அசோக்குமார், கார்த்திக் உட்பட பலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி போலீஸில் கூறினார்.
இதைத் தொடர்ந்து நாஞ்சில் முருகேசன், சிறுமியின் தாய் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.