பெண்களின் சிறுநீரில் பிரெட் தயாரிப்பு! உவ்வே- யாக இருந்தாலும் உடலுக்கு நல்லதாம்

பிரான்ஸ் நாட்டில் பிரெட் தயாரிக்க பெண்களின் சிறுநீரை பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிரெட்டில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால் உடலுக்கு நல்லதாம்.


பிரான்ஸை சேர்ந்த பிரபல பிரெட் தயாரிப்பாளர் லூஸி ராகட். இவரது தயாரிப்பான பாக்லே டி ஓர், கோல்டிலாக்ஸ் பிரெட் வகைகள் மிகவும் பிரபலமானவை. இந்த பிரெட் வகைகளை பிரான்ஸ் மக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.


ஆனால் இரு வகை பிரெட்டையும் தயாரிக்க பெண்களின் சிறுநீரை, லூஸி ராகட் பயன்படுத்தி வரும் ‘உவ்வே’ தகவல் அண்மையில் வெளியாகி உள்ளது.


இதுகுறித்து லூஸி ராகர் கூறுகையில், “பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பெண்கள் பொது கழிப்பறைகளில் இருந்து சிறுநீரை சேகரித்து வருகிறேன். இந்த சிறுநீரை குறைந்தபட்சம் 20 முறை சுத்தம் செய்கிறேன். சுத்தப்படுத்தப்பட்ட சிறுநீரை பயன்படுத்தி பிரெட் வகைகளை தயாரிக்கிறேன்.


எனது தயாரிப்பு முறையை நீங்கள் எதிர்மறையாக பார்க்கக்கூடாது. மனிதனின் சிறுநீரில் நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. பொதுவாக மனிதனின் சிறுநீர் மண்ணில் கலக்கிறது. அந்த மண், வளம் நிறைந்ததாக மாறுகிறது. அதில் இருந்தே தாவரங்கள் ஊட்டச்சத்தை உறிஞ்சுகின்றன.


அதே அறிவியல் அணுகுமுறையில், பிரெட் தயாரிக்க சிறுநீரைப் பயன்படுத்துகிறேன். சிறுநீரில் உள்ள ஊட்டச்சத்துகள் பிரெட்டில் கலக்கிறது. இந்த பிரெட்டுகள் உடலுக்கு மிகமவும் நல்லது” என்று தெரிவித்தார்.


கொஞ்சம் ‘உவ்வே’ வாக இருந்தாலும் அவர் கூறும் அறிவியல் உண்மையை ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *