உஷார்.. செல்போன் அழைப்பு மூலம் பண மோசடி…

செல்போன் அழைப்பு முதல் பண மோசடி நடைபெற்று வருகிறது என்று சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் செல்போன் அழைப்பு முதல் பண மோசடி நடைபெற்று வருகிறது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி ஒவ்வொரு நபருக்கும் ரூ.15 லட்சம் கொடுக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக ரூ.25 ஆயிரம் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும். அதற்காக வங்கிக் கணக்கு விவரங்களை கூறுங்கள் என்று செல்போன் அழைப்புகளில் மர்ம நபர்கள் பேசுகின்றனர்.

மேலும் பிரதமரின் கொரோனா நிவார நிதியாக ரூ.4,500 வழங்கப்படுகிறது. அதர்காக வெங்கிக் கணக்கு, டெபிட் கார்டு விவரங்களை கூறுங்கள் என்றும் செல்போன் அழைப்புகளில் மர்ம நபர்கள் பேசி வருகின்றனர். இந்த மோசடி அழைப்புகள் மூலம் பலர் ஏமாற்றப்பட்டு வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். எனவே போலியான அழைப்புகளை நம்பி வங்கிக கணக்கு, டெபிட் கார்டு விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்று சென்னை சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *