சென்னையில் 1,000 பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்

சென்னையில் 1,000 பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

தமிழகத்தில் சாதாரண கட்டண நகர பஸ்களில் அனைத்து மகளிரும் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் மே 8-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.1,200 கோடியை ஒதுக்கியுள்ளது.

சென்னையில் 3,000 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 1,000 பஸ்கள் சாதாரண கட்டண பஸ்கள் ஆகும். இந்த பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *