போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்று சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
“தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமத்தால் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்காக அக்.16 முதல் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு விண்ணப்பித்த நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-24615160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.