குடிசை பகுதி மக்களுக்கு டிச. 13 வரை இலவச உணவு

குடிசை பகுதி மக்களுக்கு டிச. 13 வரை இலவச உணவு வழங்கப்படுகிறது.

நிவர், புரெவி புயல்களால் சென்னையில் கடந்த இரு வாரங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு டிசம்பர் 13-ம் தேதி வரை 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

 இதன்மூலம் 5 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 26 லட்சம் பேர் பசியாறுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *