கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
சாதாரண ஒரு முகக்கவசம் ரூ.20 முதல் ரூ.200-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. அவரவர் வசதிக்கு ஏற்ப மாஸ்க்கில் மாஸ் காட்டி வருகின்றனர். ஆனால் ஏழைகளால் பத்து ரூபாய் கொடுத்து மாஸ்க் வாங்குவது கூட எட்டாக் கனியாக உள்ளது.

கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்து அணிந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான ஏழைகள் அதிகம் பேர் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாஸான முடிவை எடுத்திருக்கிறது.
இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, “தமிழகத்தில் 2.08 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா 2 முகக்கவசம் வழங்கப்படும். அவை தரமானதாக இருக்கும். தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் முகக்கவசம் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்து ரேஷன் கடைக்கு போகும்போது வடிவேலு பாணியில் எப்ப சார் மாஸ்க் கொடுப்பீங்கன்னு சும்மா ஒரு கொக்கியை போட்டு வைச்சுங்க.