முதியோர் இல்லங்களுக்கு சானிடைசர் உச்ச நீதிமன்றம் உத்தரவு

முதியோர் இல்லங்களுக்கு தேவையான சானிடைசர், முகக் கவசங்களை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முதியோர் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் அண்மையில் விசாரித்தது. அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.


“முதியோருக்கான ஓய்வூதிய தொகை உரிய நேரத்தில் அவர்களை சென்றடைய வேண்டும். நாடு முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள், சானிடைசர்கள், முகக்கவசங்களை விநியோகிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *