மயிலாப்பூர் பி.எஸ். பள்ளியிடம் இருந்து 46 கிரவுண்ட் நிலம் மீட்கப்படும்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 46 கிரவுண்ட் நிலம் பி.எஸ். உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்படுவதை அமைச்சர் பார்வையிட்டார். அந்த இடத்தை விரைவில் மீட்கவும் வாடகை வசூல் செய்திடவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்ட 30 கிரவுண்ட் நிலத்தில் மாணவ, மாணவியருக்கு பயன்படும் வகையில் அனைத்து வசதிகளுடன்கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *