இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது – வந்து விட்டது எப்ஆர்எஸ் செயலி

காவல் துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை (FRS செயலி) தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது காவல் நிலையங்களில் க்ரைம், கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் புகைப்படங்களோடு தனிநபரை ஒப்பீட்டு அடையாளம் காணமுடியும்.

இதுவரை 5லட்சத்து 30 ஆயிரம் புகைப்படங்கள் க்ரைம், கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மென்பொருளை காவல் நிலையத்தில், இணையதள வசதியுள்ள கம்ப்யூட்டர், களப்பணியின்போது எப்ஆர்எஸ் என்ற செயலியை செல்போனிலும் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் செயலியின் மூலம் குற்றவாளிகள், சந்தேகப்படும் நபர்கள், காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய புகைப்படங்களை தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பீட்டு அடையாளம் காணமுடியும்.

இந்தச் செயலியின் மூலம் ஒப்பீடு செய்யப்பட்ட புகைப்படத்தில் உள்ள நபர் வேறுறொரு காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவராக இருந்தால் காவல் அலுவலர்கள் இந்தச் செயலியின் மூலமே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்த நபரை பற்றி தகவல் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி காவல் அலுகூலர்கள் ரோந்துப் பணி, வாகனத் தணிக்கை மற்றும் இதர காவல் பணிகளை மேற்கொள்ளும் போது குற்றவாளிகள், சந்தேகத்துக்குரிய நபர்களின் புகைப்படம் மூலமாக அவர்களின் முழு குற்றப்பின்னணியினையும் எளிதிதாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும் சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும்போது அவர்களின் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளதா என்பதையும் கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம். அத்துடன் காணாமல் போன நபர்களையும் இந்தச் செயலி மூலம் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க முடியும். இந்த எப்ஆர்எஸ் செயலியானது குற்றங்களை கண்டுபிடிக்கவும் குற்றத் தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு மிகவும் உதவி கரமாக இருக்கும்

வருங்காலங்களில் சிசிடிவி வீடியோ பதிவுகளில் உள்ள ஒருநபரின் முகத்தை அடையாளம் காண ஏதுவாக எப்ஆர்எஸ் செயலியில் வீடியோ பகுப்பாய்வு வசதி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சந்தேகத்துக்குரிய நபர்களோ, தேடப்படும் குற்றவாளிகளோ அல்லது காணாமல் போனவர்களோ பேருந்து நிலையம் ரயில் நிலையம் விமான நிலையம் திருவிழாக்கள் போன்ற பொது இடங்களில் நடமாடினால் அவர்களை எதிதாக கண்டுபிடிக்க இயலும் மேலும் கலவரம் அல்லது பெருந்திரளாக மக்கள் கூடியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் எண்ணிக்கை விவரத்தை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட பகுதியின் பாதுகாப்பிற்கு தேவையான காவலர்களை பணியமர்த்த பயன்படும்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாதபு, மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் கூடுதல் இயக்குநனர் வினித் தேவ் வான்கேடே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *