கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் மே 10 முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.
தலைநகர் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மதியம் 12 மணி வரை மட்டும் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதர கடைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் நாள்தோறும் 25,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
எனவே கொரோனா பரவலை தடுக்க மே 10-ம்தேதி முதல் 24-ம்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அப்போது டாஸ்மாக் கடைகள் இயங்காது. உணவகங்களில் பார்சல் வழங்கலாம். காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை மதியம் 12 மணி வரை செயல்படலாம். அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது. ரேஷன் கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படும். பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.