சேர்க்கை ரத்து.. முழு கட்டணத்தை தர வேண்டும்…

நவ. 30-க்குள் கல்லூரி சேர்க்கையை ரத்து செய்தால் முழு கட்டணத்தையும் திருப்பி வழங்க வேண்டும் என்று ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பெற்றோர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். எனவே நவ. 30-ம் தேதிக்குள் கல்லூரி சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட முழு கட்டணத்தையும் கல்லூரி நிர்வாகங்கள் திருப்பி தர வேண்டும். அவர்களிடம் ரூ.1,000 மட்டுமே வசூலிக்கலாம். 

நவ. 30-க்கு பிறகு சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரையிலான கட்டணத்தை ரத்து செய்துவிட்டுள்ள மீதமுள்ள தொகையை திருப்பி வழங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *