நடப்பு 2020-2021 ஆண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவீதத்தை மட்டுமே ஆகஸ்ட் 31-க்குள் வசூலித்து கொள்ளலாம். பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்குள் 35 சதவீத தொகையை வசூலித்து கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சில பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அத்தகைய பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பான முழு விவரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.