பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் அண்ணனுக்கு கொரோனா தொர்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கங்குலி தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் சவுரங் கங்குலி குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். சுமார் 50 குடும்ப உறுப்பினர்கள் ஒரே வீட்டில் வாழ்கின்றனர்.
இதில் சவுரவ் கங்குலியின் அண்ணன் ஸ்னேகாஷ், அவரது மனைவி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சவுரவ் கங்குலி தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அடுத்த 14 நாட்களுக்கு அவர் யாரையும் சந்திக்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.