காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.900.50-க்கு விற்கப்படுகிறது. ஓராண்டில் மட்டும் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.300 உயர்ந்துள்ளது.