கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அதன்பிறகு 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அப்போது அச்சத்தின் காரணமாக சமையல் காஸ் சிலிண்டர் முன்பதிவுகள் அதிகரித்தன.
இதைத் தொடர்ந்து ஒரு சமையல் காஸ் சிலிண்டர் வாங்கிய பிறகு 15 நாட்களுக்குப் பிறகு தான் அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்தன. தற்போது சிலிண்டர் முன்பதிவு இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதால் 15 நாள்கள் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், எச்பி, பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.