கேட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்ய நவ. 13 வரை அவகாசம்

கேட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்ய நவ. 13 வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் செயல்படும் ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இயந்திரவியல், கட்டவியல் உட்பட 27 பாடப் பிரிவுகளில் சேர்வதற்கான இத்தேர்வு கணினி வழியில் நடத்தப்படுகிறது.

2021-22 கல்வியாண்டுக்கான கேட் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 5, 6, 7, 12, 13, 14-ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக நடக்க உள்ளது. இத்தேர்வை மும்பை ஐஐடி நடத்த உள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த செப்.11 முதல் அக். 14 வரை நடைபெற்றது. 

விண்ணப்பங்களில் மாணவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள நவ. 13 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை கட்டணமின்றி மாற்றிக் கொள்ளலாம். பாடப்பிரிவு, பாலினம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்ய கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஹால் டிக்கெட் வரும் ஜனவரி 8-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் மார்ச் 22-ம் தேதி வெளியாகும். மேலும் விவரங்களை  gate.iitb.ac.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *