தூத்துக்குடி எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் முறையாக அந்த மாவட்டத்தில் இன்று வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.


தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகள், மருமகனுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. 3 பேரும் தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் கீதா ஜீவனிடம் நலம் விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *