தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாய உத்தரவு ஒத்திவைப்பு

தங்க நகைகளை விற்பனை செய்ய ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற நடைமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயம் என்ற நடைமுறை வரும் ஜனவரி 15-ம் தேதி அமலுக்கு வரும். மீறினால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
கொரோனா வைரஸால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜூன் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *