கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை முதல்வர் பழனிசாமி மறுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் தவறானது. தொடர்ந்து நகைக்கடன் வழங்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு பணிக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து இதுவரை ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.