தங்கம் விலை பவுன் ரூ.43,000-ஐ நெருங்கியது

கொரோனா வைரஸ் தொற்றால் தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. இதன்காரணமாக வசதி படைத்தோர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர். உலகளாவிய அளவில் தங்கம் விலை ராக்கெட் போல சர்ரென்று உயர்ந்து வருகிறது.


சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு 400 ரூபாய் உயர்ந்தது. ஒரு பவுன் 42 ஆயிரத்து 992-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 374 ஆக உள்ளது.


தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருப்பது ஏழை பெண்களின் திருமணத்துக்கு பெரும் தடைக்கல்லாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *