வீட்டு தங்கத்துக்கு வரி விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மத்திய அரசின் வரி வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே வரி வருவாயை பெருக்க மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.


இதன்படி கணக்கில் காட்டாமல் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி விதிப்பது குறித்து மத்திய நிதி துறை தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி தங்கம் வாங்கியதற்கான ரசீது இல்லாவிட்டால் சிக்கல் ஏற்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தங்க வரி திட்டம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. அப்போது பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் திட்டம் கைவிட்பபட்டது. தற்போது மீண்டும் அதே திட்டத்தை கையிலெடுத்திருப்பதாக பொருளாதார துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *