கூகுள் பே-வுக்கு கட்டணம் கிடையாது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் பே செயலி மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கூகுள் பே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
“அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியாவில் கட்டணம் வசூலிக்கப்படாது. இதுதொடர்பாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது” என்று கூகுள் பே தெரிவித்துள்ளது.