தனியார் பள்ளி இலவச சேர்க்கைக்கு 86,326 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு செலுத்தும்.
தமிழகத்தில் செயல்படும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1,15,763 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 86,326 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வான மாணவர்களின் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
ஏதாவது ஒரு பள்ளியில் அதிக விண்ணப்பங்கள் இருந்தால் அக். 1-ம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கான சேர்க்கை அக். 3 முதல் 7 வரை நடைபெறும்.