நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
தேனி அருகேயுள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து ஜீவித் குமார் கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதினார். இதில் 720-க்கு 193 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தன.
அவரது பள்ளி ஆசிரியர்கள் நிதியுதவி திரட்டி தனியார் பயிற்சி மையத்தில் ஜீவித் குமாரை சேர்த்தனர். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அவர் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வில் ஒடிசாவை சேர்ந்த சோயப் அப்தாப் 720-க்கு 720 பெற்று முதலிடம் பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 8-வது இடமும் தமிழக அளவில் முதலிடமும் பிடித்தார்.