மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் இன்றி அரசு கட்டிடங்களை கட்டக்கூடாது

தமிழகத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் இல்லை என்று குற்றம்சாட்டி வழக்கறிஞர் கற்பகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

“அனைத்து அரசு கட்டிடங்களும், கழிப்பறைகளும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். எல்லா கட்டிடங்களிலும் இந்த வசதிகள் உள்ளதா என்பது குறித்து 2 மாதங்களில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இனிமேல் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இன்றி அரசு கட்டிடங்களை கட்டக்கூடாது” என்று தலைமை நீதிபதி அமர்வு கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *