ஆகஸ்ட் 1 முதல் பேருந்துகளை இயக்க தயார்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகம் முழுவதும் 20,000 அரசு பேருந்துகள் ஓடாமல் பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்காக மட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.


தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படலாம் என்று தெரிகிறது.


இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, வரும் 1-ம் தேதி முதல் அரசு பேருந்துகளை இயக்க தயாராகி வருகிறோம். கொரோனாவால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இதுவரை ரூ.3,300 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *